செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

NEET (UG) - 2016 RESULTS | மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன.

மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்ப, மே 1-இல் முதல்கட்டமாகவும், ஜூலை 24-இல் தேர்வை 2-ஆம் கட்டமாகவும் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மே 1-இல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய முதல்கட்டத் தேர்வை நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வுக்கு தாற்காலிக தடை விதித்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தையும் "நீட்' தேர்வின் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், 2-ஆம் கட்ட "நீட்' தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் http://cbseresults.nic.in/neet/neet_2016.htm என்ற இணையதளத்தில் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்