வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

TET தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவிட்டது இதை எதிர்த்து, ஆசிரியர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 'என்.சி.டி.இ.,யின் உத்தரவு சரி' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய கல்விச் சட்டத்தின் படி, '2011க்கு பின், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், 2016 நவம்பருக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்.இல்லையென்றால், அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது' என தெரிவிக்கப்பட்டது. இதில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் காலக்கெடு முடிய இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளது. ஆனால், நான்கு ஆண்டுகளாக டெட் தேர்வையே தமிழக அரசு நடத்தவில்லை. அதனால், டெட் தேர்ச்சி பெறாதவர்களுக்கான அவகாசத்தை, தமிழக அரசு நீட்டிக்குமா அல்லது தேர்வை அறிவிக்குமா என, ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்