💪💪💪💪💪💪💪💪💪💪💪
*ஆசிரிய பேரினமே..*
வகுப்பறை மட்டுமல்ல நாம் வாழும் சமூக அறையும் சுத்தமாகவும்.. சுகாதாரமாகவும் இருக்க வேண்டுமென்ற சமூக அக்கறையோடு இன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் ஆசிரிய போராளிகளே *வீரஞ்செறிந்த வணக்கம்.*
*அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தில் அடி விழுகிறது.. புதிய கல்விக் கொள்கையென இனிவரும் தலைமுறையையே கல்விக்கு கையேந்த வைக்கும் நிலை வருகிறது.. சக ஆசிரியனுக்கு ஓய்வூதியம் என்ற அவனது உரிமை பறிக்கபடுகிறது..* யார் எக்கேடு கெட்டால் எனக்கென நானுண்டு என் மனைவி மக்களுண்டென தன் பணி செய்ய கிளம்பாமல் வீதிக்கு இறங்கி வந்துள்ள ஆசிரியர்களே நீங்கள் தான் அடுத்த தலைமுறையின் நம்பிக்கை.
நம் சகோதர ஆசிரியர்கள் பாதுகாப்பாக பணிக்கு செல்லட்டும் அவர்களுக்கும் சேர்த்து நாம் வீதியில் இறங்கி குரல் கொடுப்போம். *வகுப்பறைக்கு வெளியிலும் வாழ்க்கை உண்டென அவர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் நாம் போராட்ட வகுப்பெடுப்போம்.*
*உனக்கான உணவை நீயே உண்பது போல..*
*உனக்கான காற்றை நீயே சுவாசிப்பது போல..*
*உனக்கான உரிமையையும் நீயேதான் போராடி பெற வேண்டும்.*
என்பதை உணர்ந்து வீதிக்கு வாருங்கள் *போர் தொழில் பழகுவோம்.*
இவண்
*சிவக்குமார் TNPTF
💪💪💪💪💪💪💪💪💪💪💪

0 comments:
கருத்துரையிடுக