புதன், 5 அக்டோபர், 2016

மூன்று ஆண்டாக புதுப்பிக்கப்படாத வினா வங்கி : 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளாக, வினா வங்கி புதுப்பிக்கப்படவில்லை. இந்த ஆண்டாவது, கூடுதல் வினாக்கள் இடம்பெறுமா என, மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள், மேல்படிப்பு, உயர் கல்விக்கு முக்கியம் என்பதால், அதிக மதிப்பெண் எடுப்பது, மாணவர்களின் லட்சியமாக உள்ளது.
இதற்காக, பெற்றோர் தரப்பில் பல பயிற்சிகள் தரப்படுகின்றன. மாணவர் நலன் கருதி, அரசு தேர்வுத்துறை, வினா வங்கி தயாரிக்கிறது. இது, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படுவதோடு, பெற்றோர், ஆசிரியர் கழகத்திற்கு வழங்கப்பட்டு, புத்தகமாக விற்கப்படுகிறது.மூன்று ஆண்டுகளின் பொதுத் தேர்வு வினாத்தாள்கள், வினா வங்கியில் சேர்க்கப்படவில்லை. பெற்றோர், ஆசிரியர் கழக புத்தகம் மற்றும் தேர்வுத்துறை இணையதளத்திலும், 2013 வரையே, வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: முந்தைய ஆண்டு, வினா தாள்களில் உள்ள முக்கிய வினாக்கள், அடுத்தடுத்த ஆண்டுகளின் பொதுத்தேர்வில் இடம் பெறும். வினா வங்கியில் உள்ள வினாக்களை, மாணவர்கள் படிப்பது வழக்கம்.
மூன்று ஆண்டுகளாக, வினா வங்கி புதுப்பிக்கப்படாததால், அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள், தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.
தனியார் பள்ளிகள், தாங்களாகவே, முந்தைய ஆண்டு வினாத்தாள்களை தயாரித்து வைத்துக் கொள்வதால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, இந்த பிரச்னை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர். 
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்