கடலின் ஆழத்தை கண்டறிவதற்கு அறிவியல் துறையில் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன....
அதைவிடவும் 76ஆண்டுகளுக்கு பின் வரப்போகும் ஹேலி வால்நட்சத்திரம் பற்றியும் அறிவதற்கு கூட புவியியல் ஆய்வுகள் வந்துள்ளன.....
ஆனால் இந்த 2013 ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றியும் ..... எத்தனை பணியிடம் என்றும் புரியாத புதிராகவும் ....அறியாத மர்மமாகவுமே இருந்து வருகிறது, தினம் தினம் திகில்படம் பார்ப்பது போல் பீதி.....
இதுபோதாதென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களோ ஒரு இடத்தில் 15,000 பணியிடம் என்றும்,இன்னொரு இடத்தில் 20,000 பணியிடம் என கூறிவந்தார்...பின்னர் தன்னுடைய அறிக்கையில் 13,777 பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்து இருக்கிறார்.....
ஆதிதிராவிட பழங்குடியினர் நலவாழ்வுத்துறை அமைச்சர் அவர்களோ அவர் பங்குக்கு 1,408 ஆசிரியர்பணியிடம் விரைவில் நியமிக்கப்படும் என கூறிவிட்டார்....பின்னர் பத்திரிக்கை துறையோ "டிஆர்பி நிர்வாகம் அறிவித்த 10,762 பணியிடங்கள் 2 அல்லது 3 வாரங்களில் பணியமணம் செய்யப்படும் என வெவ்வேறு மாவட்டப்பதிப்புகளில் வெவ்வேறு தகவலை கூறி வருகின்றன.....
ஐயகோ ஐயகோ எதைத்தான் நம்புவதோ பேதை மனமே!!!!!!
மேலும் மேற்கண்ட கூடுதல் பணியிடங்கள் நமக்கு சேர்க்கப்படும் என்றும்,நமக்கு விடிவுகாலம் பிறக்குமென்று காத்திருந்த தேர்வர்களின் மத்தியில் இன்றிலிருந்து ஒருசில கதறல்களும் கலக்கங்களும் என் காதுகளுக்கு வருகின்றன.....
கடவுளே 72,711 ஆசிரியர்களுக்கும் எதையும் தாங்கும் இதயம் கொடு.....மேலும் வரும் 30ம் தேதிக்குள் நல்ல ஆசி கொடு.......
இப்படிக்கு பக்தனின் கண்ணீர் வேண்டுதல்......
by
P.Rajalingam
puliangudi..Tirunelveli

0 comments:
கருத்துரையிடுக