புதன், 30 ஜூலை, 2014

94 குழந்தைகள் உடல் கருகி இறந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இன்று தீர்ப்பு

தஞ்சை 94 குழந்தைகள் உடல் கருகி இறந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.  குற்றம்சாட்டப்பட்ட 21 பேரும் நாளை கோர்ட்டில் ஆஜராகின்றனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் 
தொடக்கப்பள்ளி, சரஸ்வதி  மழலையர்பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளும் ஒரே கட்டிடத்தில் இயங்கியது. கடந்த 2004 ஜூலை 16ம் தேதி காலை பள்ளி முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். பலர் காயமடைந்தனர். தீவிபத்து குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில்  24 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அப்போது அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

             இந்த வழக்கு தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் 2005ல் குற்றப்பத்த¤ரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2006 மார்ச் 23ல் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டு, விசாரணை தொடங்கியது. இதில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமியின் மருமகனும், பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியருமான பிரபாகரன் அப்ரூவர் ஆகி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். பின்னர் இவ்வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கிலிருந்து தொடக்க கல்வி இயக்குநர் கண்ணன், சிஇஓ முத்து.பழனிச்சாமி, தாசில்தார் பரமசிவம் ஆகியோரை ஐகோர்ட் விடுவித்தது. இவ்வழக்கில் 512 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டன. இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடித்து ஜூலை 31க்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த மே 5ம் தேதி சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டது. இதையடுத்து இவ்வழக்கில் ஜூலை 30ம் தேதி(நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமதுஅலி கடந்த 17ம் தேதி தெரிவித்தார். அதன்படி இவ்வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையடுத்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 பேரும் நாளை காலை 10 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக உள்ளனர். இன்று தீர்ப்பு என்பதால் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

‘பள்ளிகளுக்கு பாடமாக இருக்க வேண்டும்.
          தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கூறுகையில் எங்கள் குழந்தைகள் இறந்த போது போன சந்தோஷம் இதுவரை திரும்பவில்லை. தீ விபத்துக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த தீர்ப்பு உலக அளவில் பள்ளிகளை நடத்தும் நிர்வாகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். காயமடைந்த பல குழந்தைகளின் தழும்பும் இன்னும் மறையவில்லை என்றனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்