ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளியில் நியமிப்பது தொடர்பாக,ஆசிரியர்தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்குநோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜ்குமார். மதுரை ஐகோர்ட்கிளையில்
தாக்கல் செய்த மனு:நான் அனைத்து வட்டார வளமைய பட்டதாரிஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர்.
தமிழகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வளமையமேற்பார்வையாளர், ஆசிரிய பயிற்றுனர்கள் என 4582 பேர்பணியாற்றுகின்றனர். 2006ல் அரசு உத்தரவில், ஒவ்வொருஆண்டும்500 ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிகளில் ஏற்படும்காலியிடங்களில் நிரப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் 2011 வரை இந்நியமனம் பின்பற்றப்பட்டது. ஆனால், 2012 -13ல் 115 பேர் மட்டுமே அவ்வாறு நியமனம்செய்யப்பட்டனர்.மீதியுள்ள 385 பேருக்கும், அடுத்த ஆண்டுக்கான 500 பேர் உட்படமொத்தம் 885 பேர் நியமிக்கப்படவில்லை. எனவே அவர்களைபள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இதற்கிடையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடி நியமனம்தொடர்பாக கடந்த ஜூலை 14ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இந்தநியமன அறிவிப்பு எங்களை பாதிக்கும். எனவே அதை ரத்து செய்யவேண்டும். 885 பட்டதாரி ஆசிரியர்களை நியமித்த பின்னர் ஏற்படும்காலியிடங்களில் அவர்கள் தெரிவித்துள்ளநியமனத்தைமேற்கொள்ளலாம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. இம்மனுநீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
'ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்புப்படி, நியமனங்கள் வழக்கின்இறுதித்தீர்ப்பை பொறுத்து அமையும். இதுதொடர்பாக கல்வித்துறைசெயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டார்.

0 comments:
கருத்துரையிடுக