செவ்வாய், 29 ஜூலை, 2014

Osho-Tamil பணத்தைப்பற்றி மிகவும் பொருட்ப்படுத்தாதே,


பணத்தைப்பற்றி மிகவும் பொருட்ப்படுத்தாதே,
பணத்தைப்பற்றி மிகவும் பொருட்ப்படுத்தாதே,
ஏனெனில் சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம் அது. துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால் பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று மக்கள் நினைப்பதுதான். பணத்திற்க்கும் சந்தோஷத்திற்க்கும் சம்பந்தம் இல்லை. நீ சந்தோஷமாக இருக்கும்பொழுது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ அதனை சந்தோஷத்திற்காக உபயோகப்படுத்துவாய். நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமயானால், நீ அந்த பணத்தை மேலும் சந்தோஷம் இல்லாமல் இருப்பதற்காக பயன்படுத்துவாய். பணம் வெறும் ஒரு சார்பற்ற சக்தி.
நான் பணத்திற்கு எதிரானவல்ல. என்னை தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளாதே. நான் பணத்திற்கு எதிரானவல்ல, பணம் ஒரு அதிகரிக்கும்கருவி. நீ சந்தோஷமாக இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ இன்னும் அதிக சந்தோஷத்தை அடைவாய். நீ சந்தோஷம் இல்லாமல் இருக்கும்போது உன்னிடம் பணம் இருக்குமேயானால் நீ இன்னும் அதிக சந்தோஷமற்ற தன்மையை அடைவாய். ஏனெனில் உன்னுடைய பணத்தை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய் – உன்னுடைய பணம் உன்னுடைய பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தும். நீ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய், உன்னிடம் சக்தி உள்ளது, நீ உனது சக்தியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? உன்னுடைய சக்தியை வைத்து மேலும் அதிக விஷத்தை உனக்கு நீயே கொடுத்துக் கொள்வாய். நீ மேலும் அதிக துன்பபடுவாய்.
பணம் சந்தோஷத்தை கொண்டு வரப் போகிறது என்பதைப் போல மக்கள் பணத்தை தேடுகிறார்கள். கௌரவம் சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது என்பதைப் போல மக்கள் கௌரவத்தைக் தேடுகிறார்கள். வேறு எங்காவது மேலும் அதிக பணம் கிடைக்குமென்றால் எந்த நொடியில் வேண்டுமானாலும் மக்கள் அவர்களுடைய பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ள, அவர்களுடைய வழிகளை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
ஆக மகிழ்ச்சியாக வாழ கவனம் செலுத்து
ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தமாக வாழ்.
உணர்வோடு இரு .
--- ஓஷோ ---

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்