வெள்ளி, 30 ஜனவரி, 2015

ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் - கோர்ட் அவமதிப்பு வழக்கில்பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ்

ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் - கோர்ட் அவமதிப்பு வழக்கில்பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ்
எம்.ஏ.,-எம்.எட்.,முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

கமுதி கே.என். பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார். பி.ஏ., -பி.எட்., தேர்ச்சி பெற்றதால், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். பின் எம்.ஏ.,-எம்.எட்., தேர்ச்சி பெற்றார். 2005 ஜூன் 30 ல் பாலசவுந்தரி ஓய்வு பெற்றார். அவர்,'பி.எட்.,முடித்ததற்கு மேற்படிப்பிற்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்
பட்டது. எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்கக்கோரி, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.
தனி நீதிபதி, 'மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,' என அரசுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் மேல்முறையீடு செய்தனர்.நீதிபதிகள்,'ஆசிரியர்களின் தகுதியை உயர்த்தும் வகையில், அரசு ஊக்க ஊதியம் வழங்குகிறது. பாலசவுந்தரிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்
படுகிறது,' என 2014 செப்.,18ல் உத்தரவிட்டனர்.

பாலசவுந்தரி,' ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்
கண்ணப்பன், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பழனியாண்டி நிறைவேற்றவில்லை. அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பழனியாண்டிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது. மனுதாரர் வக்கீல் என்.சதீஷ்பாபு ஆஜரானார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்