இடைநிலை ஆசிரியர்களா நீங்கள் ஒரு நிமிடம் யோசிக்க வேண்டிய தருணம் இது. ஊதிய முரண்பாடு இல்லை என்று நினைப்பவர்களுக்கும் ,ஊதிய முரண்பாடு உண்டு என்று நினைப்பவர்களுக்கும் இப்பதிவு.
பயிற்றுவித்த நம்மை பாடையில் ஏற்ற நினைத்தது ஏனோ????
கற்று தந்த நம்மை காலவாறி விட்டது ஏனோ? ????
கால மாற்றத்தை உருவாக்க கற்ற தந்த நம்மை நடுக்கடலில் தள்ள நினைத்தது ஏனோ?????
உலகை மாற்ற கற்றுக் கொடுத்த நமது உரிமையை பறித்தது ஏனோ? ???
அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி வளரச் செய்தது நமது மனமகிழ்வை கெடுக்கதானோ????
உண்மையை உரைக்க சொல்லுங்கள் என்று சொல்லி தந்த நம் உணர்வை உரசி பார்ப்பது ஏனோ? ????
அரசியல் கற்று தந்த நம்மிடமே அரசியல் காட்டும் வித்தை இது தானோ ????
அன்று அவர்கள் உயர நாம் ஏனிப்படியாக இருந்தது இன்று நம்மை எட்டி உதைக்க தானோ ????
IAS அலுவலர் என்று சொல்லி கொள்ளும் அவர்கள் முதல் கல்வி கற்றது எவரிடம்?????
முதல்வர் என்று சொல்லிக்கொள்ளும் அவர்களுக்கு முதலில் கற்றுத்தந்தது யாரோ?????
இதனால் தான் பாதிப்பு அனைத்தும் இடைநிலை ஆசிரியனுக்கோ .
ஊதியத்தை தாண்டி உரிமையை நிலைநாட்ட இதுவே சரியான தருணம். இடைநிலை ஆசிரியர்கள் ஆகிய நாம் இதுநாள்வரை பொருமை காத்தது போதும், உள்ளத்தில் உள்ள உணர்வை வெளிப்படுத்த இது சரியான தருணம். நன்றி மறந்த கயவர்களின் நெஞ்சை பிளக்க வா. நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும். உள்ள உணர்வுகள் அனைத்தும் எரிமலையாக வெடிக்க வேண்டும். சங்க பாகுபாடு இன்றி சங்கமிக்க வேண்டிய நேரம் இது.
