அந்தோ பரிதாபம் ! கால் கடுக்க வரிசையில் நின்ற இந்தியப் பெரும் பணக்காரர்கள் !
இந்தியாவின் பெரும் பணக்காரர்களான ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி, அணில் அம்பானி, அதானி, நாராயண மூர்த்தி போன்றவர்கள் எல்லாம் தங்களின் பெரு முதலாளியான ஒபாமாவை சந்திக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதில் வேடிக்கை என்னவெனில் இந்தியப் பெருநிறுவன முதலாளிகளான இவர்களை சந்திப்பது என்பதே முடியாத காரியம். இவர்கள் எங்கும் எதற்கும் வரிசையில் நிற்காதவர்கள். திருப்பதி கோவிலில் உள்ள கடவுளை தரிசனம் செய்யக் கூட இவர்கள் வரிசையில் நிற்கமாட்டார்கள். அப்படிப் பட்டவர்கள் ஒபாமாவை சந்திக்க வரிசையில் காத்திருந்தனர் என்பது முதலாளித்துவத்தின் வலிமையை காட்டுகிறது.
இந்த உலகத்தை வழிநடத்துவது ஆள்வது முதலாளிகளே என்பதும் தெளிவாகிறது. —

