உலக சாதனை படைத்த அப்பிள்
-----------------------------------
-----------------------------------
ஸ்மார்ட் போன்கள், ஐபேட், கணனி தயாரிப்பில் முன்னணியில் திகழும் அப்பிள்தொழில்நுட்ப நிறுவனம், உலக சாதனை படைத்துள்ளது.அதாவது, கடந்த காலாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி உலக சாதனை படைத்துள்ளது.
வணிக நிறுவனம் ஒன்று இந்த அளவு பெரிய லாபத்தொகையை பதிவு செய்துள்ளது உலகளவில் இதுவே முதல் முறை என்று ஹோவர்டு சில்வர்பிளாட் என்ற மதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது.கடந்த பண்டிகை சீசனில் அப்பிள் ஃபோன்கள் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகளவில் விற்பனையானதும், குறிப்பாக சீனாவில் விற்பனை அதிகரித்ததுமே மிகப்பெரும் லாபத்துக்கு காரணமாக அமைந்தது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது,

