வியாழன், 29 ஜனவரி, 2015

சுயநலம் மிகுந்து மனிதம் இறந்துவிட்ட மனிதர்கள்

உயிருக்கு போராடிய ஓட்டுனர்: குடம் குடமாய் பாமாயில் பிடித்து சென்ற பொதுமக்கள்
பெரம்பலூரில் விபத்தில் சிக்கிய எண்ணெய் லாரி ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளரை காப்பாற்றாமல் லாரியில் இருந்து கொட்டிய எண்ணெய்யை மக்கள் பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து நேற்று இரவு தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஓட்டுனரின் மற்றும் அவரது உதவியாளருக்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளனர்.
அதே நேரம், விபத்தில் சிக்கிய லாரியின் டேங்கரில் இருந்து பாமாயில் எண்ணெய் ரோட்டில் கொட்டியதை கண்ட அப்பகுதி மக்கள், உயிருக்கு போராடிய இருவரைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் வீடுகளில் இருந்து குடம் மற்றும் கேன்களை கொண்டு வந்து, பாமாயிலை பிடித்துச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும், விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடியவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தங்களுக்கு தேவையான எண்ணெய்யை மட்டும் பொதுமக்கள் பிடித்துச் சென்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூ இந்தியா நியூஸ்

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்