வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை வழங்க ஏற்பாடு


16 ஆயிரம் பகுதிநேர
ஆசிரியர்களுக்கு ஊதிய
உயர்வு நிலுவை வழங்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்
பணியாற்றும் 16,400-க்கும் மேற்பட்ட
தையல், ஓவியம், உடற்கல்வி,
கணினி ஆகிய பாடப்பிரிவு பகுதிநேர
ஆசிரியர்களுக்கு ஊதிய
உயர்வு நிலுவைத் தொகையை மார்ச் மாத
ஊதியத்துடன் வழங்க
நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதைய
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா,
அரசுப் பள்ளிகளில் பணிபுரிய ஓவியம்,
தையல், உடற்கல்வி,
கணினி ஆசிரியர்களை, பகுதிநேர
தொழிற்கல்வி ஆசிரியர்களாக மாதம் ரூ. 5
ஆயிரம் ஊதியத்தில் நியமிக்க
உத்தரவிட்டார்.

அதன்படி மாநிலம் முழுவதும் 16,400-
க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் தங்களை முழுநேர
ஆசிரியர்களாக நியமனம் செய்து,
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம்
இவர்களின் மாத ஊதியத்தை ரூ. 7
ஆயிரமாக உயர்த்தி தமிழக
அரசு உத்தரவிட்டது.
இந்த ஊதிய உயர்வு 2014 ஏப்ரல் முதல்
அமலுக்கு வரும்.
அதன்படி கடந்தாண்டு டிசம்பர் மாதம்
பகுதிநேர ஆசிரியர்கள் ரூ. 7 ஆயிரம் மாத
ஊதியமாக பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம்
முதலே அறிவிக்கப்பட்டதால், அதற்கான
நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்
என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் பகுதிநேர
ஆசிரியர்களுக்கான ஊதிய
உயர்வு நிலுவைத் தொகையை, ஏப்ரல்,
ஜூன், ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர்,
அக்டோபர் என 6
மாதங்களுக்கு (மே மாதம்
பள்ளி விடுமுறை) ரூ. 2 ஆயிரம் வீதம்
ரூ.12 ஆயிரத்தை, வரும் மார்ச் மாத
சம்பளத்துடனே, அதன்பின்னர் வரும்
வாரத்திலோ வழங்க தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.
இது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில்
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்