வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர்:பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தலாமா?

'பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு, 'புரோகிராம்' செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5 - 31 வரை நடக்கிறது. தேர்வு அறையில், மாணவர்கள் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்களில், எதை அனுமதிக்கலாம்; எதை அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதேபோல், சிறப்புத் தேர்வுகளுக்கான கூடுதல் தேவைகள் குறித்தும் உத்தரவிடப்பட்டு உள்ளது. * கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல் மற்றும் வணிகக் கணிதம் போன்ற தேர்வுகளுக்கு, 'லாகரிதம்' அட்டவணை, புள்ளிவிவர அட்டவணை, 'கிராப் ஷீட்' போன்றவை தேர்வறையில் வழங்கப்படும்.* புள்ளியியல் மற்றும் வணிகக் கணிதம் பாடங்கள் எழுதும் மாணவ, மாணவியர், 'புரோகிராம்' செய்யப்படாத சாதாரண கால்குலேட்டர் மட்டும் கொண்டு வர அனுமதிக்கப்படும்.இது போன்ற விவரங்கள், அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளன
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்