''தமிழ்நாடு வனத்துறை மற்றும் வனக்கழகங்களில் காலியாக உள்ள 200 வனச்சீருடை பணியிடங்களுக்கான தேர்வு பிப்.,22ல் நடைபெறவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான நுழைவுச் சீட்டை வனத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,'' என தேர்வு குழு தலைவர் இருளாண்டி தெரிவித்தார்.
மதுரையில் வனச்சீருடை பணியாளர் தேர்வுக் குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் இருளாண்டி கூறியதாவது: வனச்சீருடை பணியாளர்களுக்கான தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 30 சதவீதம் பெண்களுக்கும், 10 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், வனத்துறை இணையதளத்தில் (www.forests.tn.nic.in) வெளியிடப்படும் தேர்வுக்கான நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்கள் வனத்துறை, அரசு ரப்பர் தோட்டம் போன்ற இடங்களில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்தப்படுவர், என்றார்.

0 comments:
கருத்துரையிடுக