சுவாரசியமான தகவல்களை அறிய உதவும் ஒரு இணையதளம்
உங்களிடம் நீங்கள் பிறந்த தேதியை கேட்டால் சரியாக சொல்லுவீர்கள் அல்லவா. ஆனால் பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் தர முடியுமா?
நீங்கள் பிறந்த தினத்திலிருந்து இன்று வரை உங்களுக்கு எத்தனை வருடங்கள், எத்தனை மாதங்கள், எத்தனை நாட்கள் என்பதை கூற முடியுமா?
சரி அதனையும் ஒரு சில கணித்து கூறிவிடுவீர்கள் என வைத்துகொள்வோம். அப்படியாயின் பின்வரும் கேள்விகளை பார்ப்போம்.
* நீங்கள் பிறந்த தினத்திலிருந்து இதுவரை உங்கள் இதயம் எத்தனை தடவைகள் துடித்துள்ளது/ துடித்துக்கொண்டிருக்கிறது.
* நீங்கள் பிறந்தது தொடக்கம் இதுவரை எத்தனை தடவைகள் சுவாசித்துள்ளீர்கள்
* நீங்கள் பிறந்தது முதல் இதுவரை சந்திரன் எத்தனை தடவை பூமியை வலம் வந்துள்ளது.
* நீங்கள் பிறக்கும் போது இந்த உலகில் எத்தனை பேர் உயிருடன் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்? தற்போது எத்தனை பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? இதை தவிர, நீங்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது உலகில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் என்ன?
* உங்களுக்கு 20 வயதாக இருக்கும் போது உலகில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் என்ன என இதுமட்டுமின்றி, நீங்கள் பிறந்த 500வது நாளை அடைந்த தேதி என்ன என இவற்றுக்கெல்லாம் ஒரு சாதாரண மனிதானல் இலகுவாக எப்படித்தான் விடையளிக்க முடியும். அப்படியே விடையளிக்க வேண்டுமெனின் எந்திரன் படத்திலுள்ள ரோபோ தான் வந்தாக வேண்டும்.
சரி இவற்றுக்கெல்லாம் விடை தருகிறது Getting Old எனும் இணையதளம்.
இந்த தளத்துக்கு சென்று உங்கள் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் ஒரு சில வினாடிகளிலேயே மேற்கூறப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும்மான விடையை பெற்றுக்கொள்ள முடியும். எவராலும், மிக இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையாகவும், தெளிவான தகவல்களை தருகின்றது.


0 comments:
கருத்துரையிடுக