மெல்ல கற்கும்
மாணவர்களுக்கு விழுப்புரத்தில்
சிறப்பு வகுப்ப-- விழுப்புரம்: விழுப்புரம்
நகராட்சி காமராஜர்
மேல்நிலைப் பள்ளியில்
மெல்ல கற்கும்
மாணவர்களுக்கான
சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. விழுப்புரம்
நகராட்சி காமராஜர் மேல்நிலைப்
பள்ளியில் மெல்ல கற்கும்
மாணவ, மாணவிகளுக்கான
சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.
முதல்நாள் நேற்று தமிழ் பாடம்
குறித்து சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
விழுப்புரம் நகராட்சி காமராஜர்
மேல்நிலைப் பள்ளி, பி.என்.தோப்பு,
கீழ்பெரும்பாக்கம், எடப் பாளையம்,
விராட்டிக்குப்பம், பில்லூர்,
பொய்யப்பாக்கம், ஆஸ்பிட்டல்
ரோடு நகராட்சி பள்ளி, பூந்தோட்டம் பள்ளி,
சாணிமேடு, மரகதபுரம் மற்றும்
ஹாஜி மன்சூர் பள்ளி மாணவ,
மாணவிகள் பங்கேற்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன்,
பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.
ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர்
பா<லு மற்றும்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
செய்திருந்தனர். பயிற்சி முகாமில்
இரண்டாவது நாளாக
இன்று ஆங்கில பாடத்திற்கும்,
நாளை கணித பாடத்திற்கும்
சிறப்பு வகுப்புகள் நடக்கிறது.

0 comments:
கருத்துரையிடுக