வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மனுக்கள் எழுத ஆள்கள் நியமிக்கப்படுவார்களா?

அரசு அலுவலகங்களில் படிப்பறிவு குறைந்த கிராம மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதித் தருவதில், சிரமங்கள் உள்ளன. எனவே, ஒவ்வொரு அரசு அலுவலக வளாகத்திலும் மனுக்கள் எழுத, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாலும் வட்டாட்சியர் அலுவலக வளாகங்களிலேயே பல அரசுத் துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலகங்களில் தினந்தோறும் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க கிராம மக்கள் பெரும்பாலானோர் வருகை தருகின்றனர். இதுதவிர, பிறப்பு, இறப்பு, முதல் பட்டதாரி, வாரிசு, ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெறுவதற்காகவும், அரசு நலத் திட்ட உதவிகள் பெற அடையாள அட்டை, ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.
இவ்வாறு வருவோர் அரசு அலுவலகங்களில் மனுக்களை எழுதித் தர பலர் அமர்ந்து ஒவ்வொரு மனுக்களுக்கும் ரூ.20 முதல் ரூ.50 வரை வசூலித்து விடுகின்றனர். இதனால் பலர் திரும்பிச் செல்ல பேருந்துக்கு கூட காசில்லாத நிலைக்கோ அல்லது மதிய உணவு அருந்தாமல் வீட்டுக்குச் செல்லும் நிலைக்கோ தள்ளப்படுகின்றனர். மேலும், மனுக்களை எழுதித் தருவது போன்ற போர்வையில் ஈடுபடுவோர்தான் சான்றிதழ்கள் பெற்றுத் தரும் இடைத்தரகர்களாகவும் செயல்படுகின்றனர்.
இதுதவிர, அரசு அலுவலகங்களின் அருகே செயல்படும் நகலகங்களில் (ஜெராக்ஸ் கடைகள்) மனுக்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செயப்படுகிறது.
கிராம மக்கள் இதுபோன்ற இன்னல்களில் இருந்து தப்பிக்க அரசுத் தரப்பில் வழி செய்ய வேண்டும். இதற்காக அரசு அலுவலக வளாகத்தில் தனி அறை ஒதுக்கி, விண்ணப்பங்களை குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யலாம்.
மேலும், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உள்ளிட்டோரை ஆகியோரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்து, கிராம மக்களுக்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துதர தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். இதற்காக சில ரூபாய்களை சேவைக் கட்டணமாக வசூலித்துக் கொள்ளும் வகையிலான நடவடிக்கையைக் கூட மேற்கொள்ளலாம். இதற்காக அரசு கூடுதல் தொகையை செலவிடத் தேவையில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்