சனி, 7 பிப்ரவரி, 2015

கணவரின் வருமானம், சொத்து விவரங்களை ஆர்டிஐ மூலம் மனைவி அறிய முடியுமா?

கணவரின் வருமானம், சொத்து மதிப்பு, முதலீடுகள் குறித்து அவரது மனைவி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள உரிமை உள்ளது என்று மத்திய தகவல் ஆணையம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

குடும்ப வன்முறையில், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு நிராதரவான மனைவி, தனது கணவரின் சொத்து மதிப்பு, வருமானம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு கொடுத்தார்.

ஆனால், இவை எல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விஷயங்கள், இதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தர இயலாது என்று மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பெண் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், ஒவ்வொரு விஷயத்திலும் விதி விலக்குகள் உள்ளன. நிராதரவாக நிற்கும் பெண் தனது உரிமையைப் பெற வேண்டும் என்றால், அவரது கணவரின் சொத்து விவரங்கள் தெரிய வேண்டும். அப்பெண்ணை மூன்றாம் நபர் என கருத முடியாது. எனவே, அவருக்கு 48 மணி நேரத்துக்குள், கணவரின் அனைத்து சொத்து மற்றும் வருமான விவரங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்