சனி, 7 பிப்ரவரி, 2015

டி.ஆர்.பி., சார்பில் நிரந்தர தகவல் மையம் திறப்பு


டி.ஆர்.பி., சார்பில் நிரந்தர தகவல் மையம் திறப்பு

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில் தேர்வர்கள் வசதிக்காக நிரந்தர தகவல் மையம் திறக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., சார்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு - டி.இ.டி., அறிமுகப்படுத்தப்பட்ட பின் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ.டி., தேர்வையும் டி.ஆர்.பி., நடத்தி, ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது. ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னரும் தேர்வு குறித்த பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தேர்வர்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் தேவையில்லாமல் தேர்வர்கள் முற்றுகையிடும் சம்பவங்களும் நடக்கும். இப்பிரச்னையை போக்க தேவைப்படும் நேரத்தில் மட்டும் டி.ஆர்.பி.,சார்பில் தகவல் மையம் திறக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நிரந்தர தகவல் மையத்தை டி.ஆர்.பி., வளாகம் அமைந்து உள்ள டி.பி.ஐ., வளாக கட்டடத்தின் கீழ் தளத்தில் திறந்து உள்ளது. இந்த தகவல் மையத்தில் இரண்டு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தகவல் தேவைப்படும் தேர்வர்கள், விண்ணப்பதாரர்கள், அந்த மையத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10:00 மணிமுதல் மாலை, 5:45 மணிவரை தொடர்பு கொள்ளலாம். மேலும் அந்த மையத்தில் இருந்து தகவல்கள் பெற 2827 2455, 73730 08134 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்