ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

செல்வ மகள்' சேமிப்பு திட்டம்: தமிழகத்தில் துவக்கம்.


சென்னைபெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட, 'செல்வ மகள் சேமிப்பு கணக்குதிட்ட துவக்க விழாசென்னை,
மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், 'சுகன்யா சம்ரிதிஎன்ற, 10வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டத்தைஅறிமுகப்படுத்தினார்இத்திட்டம்தமிழகத்தில் முதலாவதாக,சென்னைமயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில், 'செல்வ மகள்சேமிப்பு திட்டம்என்ற பெயரில்நேற்று துவக்கப்பட்டதுசென்னைவட்டதலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின்அலெக்சாண்டர்ஒன்றரை வயது பெண் குழந்தை ரத்னாவிற்குமுதல்பாஸ் புத்தகத்தை வழங்கிதிட்டத்தை துவக்கி வைத்தார்அவர்பேசுகையில், ''இதுஅறிமுகத் திட்டம் என்பதால்நடப்பு ஆண்டில், 11வயதிற்குட்பட்ட குழந்தைகளும்இத்திட்டத்தில் சேர வாய்ப்புஅளிக்கப்படும்பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற வேண்டும்,''என்றார்.
சிறப்பு அம்சங்கள்

* 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு காப்பாளர் மூலம்கணக்கு துவங்க முடியும்.
கணக்கு துவங்க குறைந்தபட்ச தொகை, 1,000 ரூபாய்.
ஒரு நிதியாண்டில்அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தமுடியும்வட்டி விகிதம், 9.1 சதவீதம்.
கணக்கு துவங்கியதில் இருந்து, 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம்.
கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தைகள், 18 வயது முடிந்த பின்,இருப்புத் தொகையில் இருந்து அதிகபட்சம், 50 சதவீதம் மேற்படிப்புஅல்லது திருமணத்திற்காக பெற்றுக் கொள்ள முடியும்.
வாரிசு நியமன வசதி இல்லை.
குழந்தைக்கு 21 ஆண்டுகள் முடிந்த பின் கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

விருப்பத்தின் படி மாதாந்திர வட்டி பெறும் வசதி உள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்