ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

வாட்ஸ் அப்பில் இலவச வாய்ஸ் கால் சேவை: இந்தியாவில் அறிமுகம்

வாட்ஸ் அப் மூலம் இதுவரை தகவல்கள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் பரிமாற்றப்பட்ட நிலையில், தற்போது இலவச வாய்ஸ் கால் சேவையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எனினும் இந்த சேவை அழைப்பின் பேரில் மட்டும் வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால் சேவையில் ஏற்கனவே உள்ள ஒருவர் விடுக்கும் அழைப்பின் மூலம் மட்டுமே இந்த வாய்ஸ் கால் சேவையை மற்றொருவர் பெறமுடியும். ஆண்டிராய்ட் போன்களில் மட்டுமே இந்த புதிய சேவையை பயன்படுத்த முடியும். மேலும் வாட்ஸ் அப் லேட்டஸ்ட் வெர்ஷன் 2.11.508-ஐ அப்டேட் செய்திருக்கவேண்டும்.

ஜி.எஸ்.எம். அரங்கில் இருந்து கிடைத்துள்ள தகவலின் படி 'ரெடிட்' பயன்பாட்டாளரான 'பிரட்னேஷ்07' என்பவர் தனது நெக்சஸ் 5 ஸ்மார்ட் போன் மூலம் இந்த வாட்ஸ் அப் ப்ரீ கால் சேவையை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அவரும் கூட மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கும் முறை காணப்படவில்லை என்று கூறியுள்ளார். எனினும் இந்தியாவில் நெக்சஸ் 5 பயன்படுத்துபவர்கள், அதில் லாலிபாப் 5.0.X உபயோகப்படுத்தினால் மட்டும் இந்த சேவையை பெற முடியும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

நெக்சஸ் 5 போன் வைத்துள்ளவர்கள் வாட்ஸ் அப்பில் ஏற்கனவே காணப்படும் சாட், தொடர்புகள்(கான்டாக்ட்ஸ்) போன்று புதிதாக கால்ஸ் என்ற புதிய அமைப்பை தற்போது காணலாம். எனினும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே இச்சேவையை பயன்படுத்த முடியும் என்ற நிலையை மாற்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.வாட்ஸ் அப்பில் இலவச வாய்ஸ் கால் சேவை: இந்தியாவில் அறிமுகம்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்