இடைநிலை ஆசிரிய சமுதாயத்திற்காக போராட... தொடக்கக்கல்வித் துறையில் சங்கங்கள் இல்லையா...? போராட உறுப்பினர்கள் இல்லையா...? உறுப்பினர்களுக்காக போராட பொறுப்பளர்களுக்கு மனம் இல்லையா...?
தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து துறையை சார்ந்த ஊழியர்களை விட இடைநிலை ஆசிரியர்களுக்குதான் ஊதிய இழப்பு அதிகம்.
இந்நிலையில் தொடக்கக்கல்வித் துறையிலுள்ள சங்கங்கள்.... இடைநிலை ஆசிரியர்களால் தங்களை வளர்க்கும் சங்கங்கள்... ஏன் தங்களின் உறுப்பினர்களின் இழப்பை களைய... ஒரு வலுவான போராட்டத்தை... ஒரேயொரு கோரிக்கைக்காக போராட்டத்தை நடத்தியிருக்கலாமே...
அப்படி நடத்தியிருந்தால் அரசுக்கு எங்களின் ஊதிய இழப்பை களைய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும்.
தொடக்கக்கல்வித் துறையில் சங்கங்கள் இல்லையா...? போராட உறுப்பினர்கள் இல்லையா...? உறுப்பினர்களுக்காக போராட பொறுப்பளர்களுக்கு மனம் இல்லையா...?
கூட்டு போராட்டம் வலுச்சேர்க்கும் தான்.... ஆனால் போராட்டத்தின் தன்மை வலிமையானதாக இருக்கவேண்டும் அல்லவா...
30க்கும் மேற்ப்பட்ட சங்கங்கள் சேர்ந்து மாநில அளவிலான ஒரு போராட்டம்... அதுவும் அரசு நம்மை அழைத்து பேச வைக்கிற அளவிலான போராட்டம் நடத்தியிருக்கலாமே...
எதற்கு இந்த மாவட்ட அளவிலான பேரணி... யாரை சரிகட்ட இந்த நீர்த்துப்போன போராட்டம்...?
பத்தோட பதினொன்னா... எங்கள் ஊதிய பிரச்சினை வைத்து... எங்கள் மாஸ் மூலம் ஆதாயம் தேடவா...?
ஊருக்கெல்லாம் பாடம் நடத்தும்... எம் ஆசிரிய இனமே... இன்னும் எத்தனை முறைதான் உங்களுக்கு பாடம் புகட்டும் வேண்டும்...
வலி உள்ளவர்கள் தான் வேதனை உணர முடியும்....
நாம் ஏமாற்றப்பட கூடாது...


0 comments:
கருத்துரையிடுக