ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

தனிப்பட்ட ஆசிரியையின் முயற்சியால் அரசுப்பள்ளிக்கான கட்டடம் கட்டும் பணி !


தனிப்பட்ட ஆசிரியையின் முயற்சியால் அரசுப்பள்ளிக்கான கட்டடம் கட்டும் பணி !

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ள துளுவபுஷ்பகிரி என்னும் கிராமம் வானம் பார்த்த பூமி. இக் கிராமத்தில் உள்ள பள்ளியானது (ஆஸ்பெஸ்டாஸ்) கல்நார் ஓட்டினால் ஆன கட்டடம் 1952 இல் தொடங்கப்பட்டது.

தற்போது 62 ஆண்டுகள் கடந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மழை வந்தால் வகுப்பறை குளம் வெயில் அடித்தால் கல்நார் ஓட்டின் உஷ்ணம் தகிக்கும் . இவைகளையும் தாண்டி அந்தப் பள்ளிக் குழந்தைகள் தரமாக படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை திருமதி. மீனாராஜன் அவர்கள் இப்பள்ளிக்காக புதியக் கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டபோது,, இவரின் முயற்சியைக் கண்ட அக் கிராமப் பெரியவர் திரு.கோவிந்தசாமி ஆசிரியர்( ஓய்வு) அவர்கள் தன்னிடம் இருந்த 20 செண்ட் நிலத்தை தானமாக பள்ளிக்கு கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியை மீனாராஜன் சென்னை ரோட்டரி மைலாப்பூர் அப்டவுன் உதவியுடன் 2425 சதுர அடியில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட முயற்சிகள் எடுக்கப் பட்டு பள்ளிக் கட்டிடம் மேற்கூரை ( roofing ) வரை முடிந்துள்ளது..

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு கல்வி பயிலும் ஏழை, நடுத்தட்டு குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளாதாக அமையும் என்ற நோக்கில் வகுப்பறைகள் மட்டுமின்றி கணினி வசதியுடன் கூடிய ஒலி- ஒளி அமைப்புடன் கூடிய அறை அமைக்கவும் முயற்சிகள் முயற்சிகள் எடுக்கப்படுகிறது.

ஏழைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற நிலை மாறி பணக்காரர்களும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று பள்ளியின் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிக்கப் படுகிறது எனக் கூறியது குறிப்பிட்தக்கது.

இக்கிராமத்தை சுற்றியுள்ள ஏழு கிராமங்களில் 1500 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப் பள்ளி கட்டி முடிக்கப் படும்போது 150 மாணவர்கள் மேல் பயன் பெறுவார்கள்.

மேற்கூரை வரை கட்டிமுடிக்கப் பட்ட நிலையில் ,மேலும் உள்கட்டமைப்பு , கழிவறை , பள்ளிச் சுற்றுசுவர் , மதிய உணவு சமையலறை போன்றவைகள் கட்டி முடிக்க 15 இலட்சம் வரை தேவைப் படுவதினால் உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட பரிசீலியுங்கள்.

நன்றிகள் பல,

உங்கள் தோழி,
மீனாராஜன்.
Mobile Number
09600142437

cheqeus can be made in the name of ;
SSA Aided Primary School,Thuluvapushpagiri
Address;
D.Meenarajan
28/2,12th Avenue, vaigai Colony ,Ashok Nager,
chennai-83

Email; dmeenarajan@gmail.com

The Bank Details Are;
SSA Aided Primary School , Thuluvapushpagiri,
State Bank Of India
Santhavasal Branch,
A/C .NO;32417332164
IFSC NO; SBIN0004879..

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்