சங்கராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கற்றலில் பின்
தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி தொடங்கியது.
சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்
பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் கற்றலில் பின் தங்கிய
மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்கியது.
மகளிர் மேல் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்
ஆரோக்யசாமி துவக்கி வைத்து பேசினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்வேலன்,
கருத்தாளர்கள் சுகந்தி, ஜெயசீலி, பார்கவி, ஜென்சி, சார்லஸ் பயிற்சி அளித்தனர்.
சங்கராபுரம், எஸ்.வி. பாளையம், எடுத்தனூர், அரசம்பட்டு, நெடுமானூர், பொய்குனம்,
செல்லம்பட்டு, சீர்பாதநல்லூர் பள்ளிகளை சேர்ந்த 165 மாணவிகள்
கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு 5 நாட்கள் நடக்கிறது.

0 comments:
கருத்துரையிடுக