கணினி ஆசிரியர் பணி நியமனத்தில் 1:5 விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று, கணினிப் பட்டதாரிகள் புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு வட்டத்தைச் சேர்ந்த கணினிப் பட்டதாரிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவின் விவரம்:
கணினி ஆசிரியர்கள் நியமனப் பட்டியலில் பிற பட்டதாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி ஆட்சியரிடம் மனு அளித்திருந்தோம்.
அதன்படி அந்தப் பட்டியலில் இதர பட்டதாரிகள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குப் பதிலாக கணினிப் பட்டதாரிகளின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் வரும் 27-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. எந்த ஒரு பணியிடத்துக்கும் 1:5 விகிதத்தில் உரிய நபர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதே சரியான நடைமுறையாகும். அதே முறையில் இந்தக் கணினி ஆசிரியர் பணியிடத்திற்கும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக