செவ்வாய், 3 மார்ச், 2015

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்து தமிழகம் முழுவதும் மார்ச் 8-ல் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தேசியச் செயலர் வா.அண்ணாமலை கூறினார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூரில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்.
பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும். தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். தொடக்கப் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி தமிழகம் முழுவதும், தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றார். மாநிலப் பொருளாளர் நம்பிராஜ், துணைத் தலைவர் எழிலரசன், வட்டாரத் தலைவர் அம்பேத்சிங் உடனிருந்தனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்