திங்கள், 23 மார்ச், 2015

குரூப் -2வில் 1:5 விகிதம்தேர்வானவர்கள் குழப்பம்


பழநி:டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 பணியிட நியமனத்திற்கு வழக்கமான 1:2 என்ற விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 பதவிகளான நகராட்சி ஆணையர், உதவி வணிக வரி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறை நன்னடத்தை அதிகாரி, கூட்டுறவுசங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1064 பணியிடங்களுக்கு 2014 நவம்பரில் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் மார்ச் 9ல் வெளியானது. இதற்கு முன் தேர்வில் பெற்றவர்களில் 1:2 விகிதாசாரத்தில் தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
தற்போது தேர்வாணையம் 1:5 விகிதாசாரத்தில் தேர்வானவர்களை அழைத்துள்ளது. இதில் யாருக்கு பணிநியமனம் கிடைக்கும், எவ்வாறு தேர்வு செய்யப் படவுள்ளனர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பழநி ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி
கூறுகையில், 'குரூப்-2 வில் 1064 காலி பணி இடங்களுக்கு 5,565 பேருக்கு இம் மாத கடைசியில் சான்றிதழ் சரிபார்த்தல் பணி துவங்க உள்ளது. இது மட்டும் 2 முதல் 3 மாதம் நடைபெறும். அதன் பின் நேர்முகத்தேர்வு நடைபெறும். இரண்டு முறை சென்னை செல்வதால் மாணவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

1:5 விகிதாசாரத்தில் அழைக்கப்படுபவர்களில் யாருக்கு பணி நியமனம் கிடைக்கும் என்பதில்
தேர்வானவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது ' என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்