ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், குடிமை பணிக்கான மாதிரி ஆளுமை தேர்வு (ஐஏஎஸ், ஐபிஎஸ்) சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமை பணித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்படும்.
மாணவ , மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் 2 அலுவலக வேலை நாட்களில் பயிற்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படும்.
தமிழகத்தை சார்ந்த அனைத்து மாணவர்களும் இந்த பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள். 3 புகைப்படத்துடன், முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த நகலை சமர்ப்பித்து, தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இந்த பயிற்சி மையத்தில், மூத்த இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அலுவலர்களையும், கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாதிரி ஆளுமை தேர்வும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. 2014ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்படும் நாட்கள் பற்றி விவரம் (www.civilservicecoaching.com) என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

0 comments:
கருத்துரையிடுக