வெள்ளி, 27 மார்ச், 2015

டாஸ்மாக்கிற்கு மேலும் ரூ.30 ஆயிரம் கோடி இலக்கு தமிழகத்தை குடியில் தள்ளும் பட்ஜெட்

பட்ஜெட்டில் டாஸ்மாக் மது பானக் கடைகளுக்கு மேலும் ரூ. 30 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு தீர்மானித்துள்ளதன் மூலம் தமிழகத்தை மேலும் குடியில் தள்ளியுள்ளது அதிமுக அரசு என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.2015-க்கான பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடுமையான வேலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண ஏழை, எளிய மக்களுக்கான பொது விநியோகத்தை பலப்படுத்துவதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே ரேசனில் வழங்கப்பட்ட பொருட்கள் கடந்த 4 மாத காலமாக வழங்கப்படவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். மத்திய அரசும் பொதுவிநியோகம் என்ற பொறுப்பிலிருந்து விடுபடும் நிலையில் இந்த பட்ஜெட்டில் பொது விநியோகத்தை பலப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு இல்லையென்பது ஏமாற்றமளிக்கின்றது என மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் கூறியுள்ளனர். அவர்களது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:மேலும் தமிழகத்தில் கடந்த 8 மாத காலமாக 2 லட்சம் முதியோர், விதவை, ஆதரவற்றோர் உதவித் தொகையை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. இதனால் விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களை மரணத்தை நோக்கித் தள்ளும் வேலையை தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது. நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்கக்கோரி போராட்டங்கள் பல நடந்தாலும் அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவிக்காதது ஏமாற்றமளிக்கின்றது. மேலும் பட்ஜெட்டின் வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய டாஸ்மாக் மூலம் 30,000 கோடி வருவாய் இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த காலத்தில் டாஸ்மாக் கடைகளின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் 60 சதவீதம் குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் கூட குடிக்கும் பழக்கத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் குடும்ப வன்முறைகளும், குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. குடிப்பழக்கத்தால் தமிழகமே சீரழிந்து வருகின்றது. பல்வேறு குடும்பங்களில் ஆணின் வருமானம் இல்லாமல் மிக மோசமான வறுமைக்குள் அக்குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன. இளம் விதவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணமே உள்ளது. இதனால் கடந்த ஓராண்ட காலத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் போதை பொருட்களின் உற்பத்தியைக் குறைக்கவும், பூரண மதுவிலக்குக் கோரியும் பெண்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தியுள்ளனர்.இத்தகைய சமூகச் சீரழிவை தடுத்து நிறுத்தாமல் ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் வருவாயை அதிகரிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மேலும் இது தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் உணர்வுகளை மதிக்காத போக்கையே இது காட்டுகிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்