வெள்ளி, 27 மார்ச், 2015

அலுவலக பணியாளர்கள் சஸ்பெண்ட் கண்டித்து வரும் 31ல் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி,:ஓசூர் தேர்வு மையத்தில் நடந்த, முறைகேடு குற்றச்சாட்டுகளில், அலுவலக பணியாளர்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து வரும், 31ம் தேதி கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.பள்ளிக்கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின், கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பின் அவரச ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பால்ராஜ், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். பின்னர், மாநில தலைவர் பால்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு தேர்வு பணிகளை பொறுத்தவரை, தேர்வு மையத்திற்கு முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், பறக்கும்படையினர் மற்றும் தேர்வறை கண்காணிப்பாளர்களை நியமிப்பதுடன், அலுவலக பணியாளர்களின், பணி முடிவடைந்து விடுகிறது. இந்நிலையில், ஓசூர் தேர்வு மையத்தில் வாட்ஸ் அப் மூலம், வினாத்தாள் அனுப்பிய ஆசிரியர்களை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் அதிகாரமில்லாத அலுவலக பணியாளர்கள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்செயல் பணியாளர்களை அவமானத்துக்கும், அவப்பெயருக்கும் ஆளாக்கியுள்ளது.அலுவலக பணியாளர்கள், ஓய்வின்றியும், விடுப்பின்றியும் நெருக்கடியுடன் பணியாற்றி வருகின்றனர். தேர்வுகள் துறை நிர்வாக குழப்பத்தின், ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெருக்கடியில் இருந்தும், பொய்யான குற்றச்சாட்டுகளில் இருந்தும், பணியாளர்கள் விடுவிக்க கோரியும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், அத்துமீறிய நடவடிக்கைகளை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வரும், 31ம் தேதி, அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து, கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன் பிறகும், தீர்வு காணப்படவில்லை என்றால், மாநிலம் தழுவிய அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்