34 வருடங்களாக ஆசிரியர் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியை திருமதி அனுராதா அவர்கள். மொத்தமாக 2 பள்ளிகளில் மட்டுமே பணிபுரிந்துள்ளார். ( 20 வருடங்கள் ஒரு பள்ளி + 14 வருடங்கள் எம்பள்ளி). அனைவரிடத்திலும் மிக்க அன்புமிக்கவர், குழந்தைகளிடமும், அவர்தம் வகுப்பறை விட்டு அகலாமல் ஒன்றியிருந்தவர்...முத்து போன்ற கையெழுத்து என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்... கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறும் காலத்தில் உடல் நலம் குன்றியிருந்த இவருக்கு இன்று பணிநிறைவு நாளை உ.க.அ திரு நாராயணசாமி அவர்கள் , பெ.ஆ.க தலைவர் திரு கருணாகரன் அவர்கள் , பெ.ஆ.க பொருளாளர் திரு பல்லவி பரமசிவன் அவர்கள் ,மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் புடை சூழ பணிநிறைவு பாராட்டு விழா இனிதே நடைபெற்றது.
பணிநிறைவு பெற்று உள்ள ஆசிரியை அனுராதா அவர்கள்








0 comments:
கருத்துரையிடுக