வியாழன், 12 மார்ச், 2015

தஞ்சை தமிழ் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் பிஎட் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கக, மதுரை மைய ஒருங்கிணைப்பாளர் பா.பாலன் வெளியிட்டுள்ள செய்தி:
நடப்பு ஆண்டுக்கான(2015) பிஎட் படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்துடன், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு கிடையாது. பணி அனுபவத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டுக் கணிதம், உயிரி இயற்பியல், பயன்பாடு இயற்பியல், புவி இயற்பியல், மின்னணுவியல், உயிரிவேதியியல், உயிரிநுட்பவியல், பயன்பாட்டு வேதியியல், தாவர-உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், நுண்ணுயிரியல், பயன்பாட்டு புவியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பவியல், தாவர உயிரித் தொழில்நுட்பவியல் ஆகிய பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், பொருளியல், வணிகவியல், மனையியல், அரசியல் அறிவியல், சமூகவியல், இந்திய பண்பாடு, தர்க்கவியல், தத்துவவியல், உளவியல் ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.மதுரை கோரிப்பாளையம் கல்பாலம் சாலை மற்றும் 36, மேல வடம்போக்கித் தெரு ஆகிய இடங்களில் உள்ள கல்வி மையங்களில் விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பான விவரங்களுக்கு 81444-08771, 90433-43743 என்ற எண்களில் தொடர்பு கொள்ளாம் என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்