புதன், 18 மார்ச், 2015

பல்கலை தேர்வு முடிவுகள வெளியீடு்

சென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியின் மூலம், கடந்த டிசம்பரில் நடந்த, தொழில்முறை கல்வி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. பல்கலை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியின் மூலம், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.ஐ. டி., ஆகிய தேர்வுகளுக்கான முடிவுகள், இன்று காலை 8:00 மணிக்கு வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை, www.ideunom.ac.in, www.unom.ac.in என்ற இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். ஏ12, ஏ13, சி12, சி13, சி14 என்ற, பதிவெண்களை கொண்ட நடப்பாண்டில் எம்.சி.ஏ., பயிலும் மாணவர்கள், ஏ13, சி13, சி14 என்ற பதிவெண்களில் துவங்கும் நடப்பாண்டில் எம்.எஸ்., (ஐ.டி.,) படிக்கும் மாணவர்கள் மட்டும், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர். அதேபோல், நடப்பு கல்வியாண்டில் எம்.பி.ஏ., (2 ஆண்டுகள்) பயிலும் ஏ13, சி13, சி14 என்ற பதிவெண்களை கொண்ட மாணவர்கள், ஏ10, ஏ11, ஏ12, ஏ13, சி10, சி11, சி12, சி13, சி14 என்ற பதிவெண்களில் துவங்கும் ஒருங்கிணைந்த எம்.பி.ஏ., படிக்கும் மாணவர்கள், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்ப கட்டணம், 750 ரூபாய் (ஒரு பாடத்திற்கு). மறுமதிப்பீட்டிற்கு, www.ideunom.ac.in என்ற, பல்கலை இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க, வரும் 25ம் தேதி கடைசி நாள். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்