திருத்தணி: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி புதிய கட்டடத்தில் துவக்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சிக்குட்பட்ட தாடூர் காலனியில், ஊராட்சிய ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், தொடக்கப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காகவும், வசதிக்காகவும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், (எஸ்.எஸ்.ஏ.,) 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடமும், 2.50 லட்சம் ரூபாய் செலவில் மாணவர்களின் கழிப்பறை கட்டடமும் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா, நேற்று முன்தினம் ஒன்றிய சேர்மன் ரவி தலைமையில் நடந்தது. இதில், அரக்கோணம் தொகுதி எம்.பி., அரி, புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, புதுவாழ்வு திட்டம் மூலம், இலவசதையல் பயிற்சி பெற்ற, 25 பெண்களுக்கு தையல் சான்றிதழ், இரண்டு பெண்களுக்கு, நடத்துனர் உரிமம், ஐந்து பேருக்கு ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை எம்.பி., வழங்கினார்.

0 comments:
கருத்துரையிடுக