பள்ளி ஆசிரியர்களுக்குஅடைவு திறன் பயிற்சி
குளித்தலை:தோகைமலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தோகைமலை வட்டார வளமையத்தில் நடந்த பயிற்சிக்கு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) தீபா தலைமை வகித்தார். பயிற்சியை, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்னம்மா, உதவி தொடக்க கல்வி அலுவலர் வரதசிகாமணி ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.பயிற்சியில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, மாதாந்திர அடைவுதிறன் மதிப்பீடு, பள்ளிகளில் கல்வி சார் திறன்களை மதிப்பீடு செய்தல், தர நிலை மற்றும் கனவுப்பள்ளி குறித்து, ஆசிரியர்களின் சுயமதிப்பீடு ஆகிய தலைப்புகளில் செய்முறை மற்றும் படவிளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.ஆசிரியர் பயிற்றுனர்கள் மாணிக்கராஜ், செந்தில்குமார், பாலகிருஷ்ணன், பாலசுப்ரமணி மற்றும் தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், 238 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:
கருத்துரையிடுக