வெள்ளி, 20 மார்ச், 2015

கேள்விக்கு விடை கேள்வி:தமிழ் தேர்வில் 'சுவாரஸ்யம்'


பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் நான்கு மதிப்பெண் கேள்விக்கான விடை, அடுத்த கேள்வியாக அமைந்திருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இத்தேர்வு வினாத்தாளில் சிறுவினா பகுதியில் 'பண்டைய கடல் வாணிபம் குறித்து எழுதுக' என்று 43வது கேள்வி இடம் பெற்றது. உரைநடை பகுதியை 'பாராகிராபாக' கொடுத்து அதில் இருந்து ஐந்து கேள்விகளுக்கு விடை எழுதும் வகையில் 46வது கேள்வி இடம் பெற்றது. அதில், பண்டைய கடல் வாணிபம் பற்றிய முழு தகவல்கள் இடம் பெற்றிருந்தது. 43வது கேள்விக்கான விடையாக அந்த 'பாராகிராப்' அமைந்திருந்தது.

ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "43வது கேள்விக்கான விடையாக 46வது கேள்வியை வரி மாறாமல் எழுதினாலே நான்கு மதிப்பெண் உறுதியாக கிடைக்கும். மாணவர்கள் பெரும்பாலும் இதை புரிந்துகொண்டு விடை எழுதிவிட்டனர்" என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்