நாமக்கல்: 'நீர்நிலை பகுதிகளுக்கு, பள்ளி மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லக்கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாணவ, மாணவியரை, சுற்றுலா அழைத்துச் செல்லும்போது, சில இடங்களில் விபத்து
உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விடுவதால், கல்வி சுற்றுலா திட்டத்தை, பெரும்பாலான பள்ளிகள் செயல்படுத்துவதில்லை. ஆனாலும் சில பள்ளிகள், நீர்நிலை பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதால், நீரில் மூழ்கி, மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து விடுகின்றன. சமீபத்தில், சென்னை, பூந்தமல்லி அருகே, தனியார் பள்ளி மாணவர்கள் சென்ற இடத்தில், ஒரு மாணவர், நீரில் மூழ்கி இறந்தார். இந்நிலையில், 'கல்வி சுற்றுலாவில், நீர்நிலை பகுதிகள் இடம்பெறாதவாறு, பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆறு, குளம், அருவி, அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு, மாணவர்களை கண்டிப்பாக அழைத்துச் செல்லக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

0 comments:
கருத்துரையிடுக