அண்ணே! இந்த "நிலம் கையகப்படுத்தல்" ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாண்ணே ?-நன்றி mailam bala murugan
அடேய்! உன் நிலத்தை உனக்கிட்ட கேக்காமலே எடுத்துக்கிறதுடா.
அண்ணே! அதுக்கு பேரு திருட்டுண்ணே.
அட பேரிக்காய் மண்டையா!
நீயோ நானோ எடுத்தாத்தேன் அது திருட்டு.
அதையே பதவியில இருந்து எடுத்தா, அதுக்குப் பேரு வளர்ச்சி திட்டம்டா .
அந்த நிலத்தையெல்லாம் என்னண்ணே பண்ணுவாங்க ?
அரசாங்கம் எடுத்து... அம்பானி, டாடா, அதானி மாதிரி பெரிய முதலாளிங்ககிட்ட கொடுத்துரும். அதை வச்சு அவுங்க கோடி கோடியா சம்பாதிப்பாங்க.
நம்ம விவசாயம் பண்ணி பொழச்ச பூமிய விட்டுட்டு நாம என்னண்ணே பன்றது?
நிலத்தை எடுத்துக்கிற கம்பனில வேலைக்கி சேர வேண்டியதுதான்.
இது என்னண்ணே அநியாயமா இருக்கு.
வெள்ளக்காரன்கூட நிலத்துக்கு வரிதான் கேட்டான்.
ஆனால், இந்த அரசியல்வாதிங்க நிலத்தையே எடுக்குறாங்க.
உனக்கு தெரியுது. மக்களுக்கு தெரிய மாட்டேங்குதே.

0 comments:
கருத்துரையிடுக