ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

ராமநாதபுரம் மாவட்ட சத்துணவு மையங்களில் 219 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு..

சத்துணவு மையங்களில் 219 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு...ராமநாதபுரம்: பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 219 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்ய, பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மண்டபம் - 27, ஆர்.எஸ்.மங்கலம் -18, திருவாடானை - 26, முதுகுளத்தூர் - 15, கமுதி - 22, கடலாடி - 26, பரமக்குடி - 17, போகலூர் - 14, நயினார்கோவில் - 11, திருப்புல்லாணி - 22, ராமநாதபுரம் - 17, ராமநாதபுரம் நகராட்சி - 1, பரமக்குடி நகராட்சி - 3, என மொத்தம் 219 பள்ளி சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதி: ஐந்தாம் வகுப்பு படித்து, எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதி திராவிடர் 1.1.2015 அன்று 21 வயது நிரம்பியவராகவும், பழங்குடியினர் 18 வயது நிரம்பியவராகவும், இருதரப்பினரும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் காலி இடம் உள்ள மையம் அமைந்திருக்கும் ஊரிலோ அல்லது 3 கி.மீ., தொலைவிற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்ப படிவத்தை www.ramanthapuram.nic.in/nmp.htmஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் கல்வி, வயது, இருப்பிடச் சான்று, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஜாதிச்சான்றுகளின் ஜெராக்ஸ் இணைத்து ஏப்., 7க்குள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கலாம். அன்றைய தினமே நேர்காணல் நடத்தப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களும், ஏப்., 7 க்கு பிறகு பெறப்படும் மனுக்களும் ஏற்கப்படமாட்டாது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்