கோவை:மாநிலம் முழுவதும், தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைக்கல்வி வரை தமிழ்
வழிக்கல்வியை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி, ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ)
சார்பில், நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கவுள்ளதாக,
அறிவிக்கப்பட்டுள்ளது.கோவையில், சிவானந்தா காலனியில் நடக்கும்
போராட்டத்தில், உயர்மட்டக்குழு பொறுப்பாளர்கள் ராஜசேகரன், கணேஷ்குமார்
தலைமையில், 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதில், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்
கழகம், தமிழாசிரியர்கள் கழகம் உள்ளிட்ட, 27 சங்கங்கள்
பங்கேற்கிறது.போராட்டத்தில், 'மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை
வழங்க வேண்டும்; ஆறாவது ஊதிய குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த
வேண்டும், அகவிலைப்படி, 100 சதவீதத்தையும் கடந்துவிட்டதால், 50 சதவீத
அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். உடற்கல்வி
இயக்குனர் பணியிடங்களை நிரப்பவேண்டும். தொடக்கப்பள்ளிகளை மூடும் போக்கை
கைவிடுதல் வேண்டும்' உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.
சனி, 18 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக