-கல்விப் பணிகளைத் தான் செய்வோம்; சத்துணவு சமையல் மற்றும் உணவு
பரிமாறும் பணிகளை செய்ய மாட்டோம்' என, கலை ஆசிரியர்கள் தெரிவித்து
உள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க மாநிலத் தலைவர்
எஸ்.ஏ.ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:சத்துணவு ஊழியர்களின் நியாயமான
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். பல பள்ளிகளில் சமையற்கூட பூட்டை
உடைத்து, ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி, சத்துணவு சமைக்கும் பணியில்
ஈடுபடுத்துகின்றனர். இதைக் கண்டிக்கிறோம்.
ஏற்கனவே, அரசின் நலத்திட்ட பணிகளுக்காகவும், இலவச பொருட்கள் வழங்குவதற்காகவும், கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது சத்துணவுப் பணியும் கூடுதல் சுமையாக உள்ளது. எனவே, மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தரும் பணிக்கு மட்டும், ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக