
ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெண்கள், குடும்பத்தினர் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவிருக்கிறீர்களா… இதோ ஒரு உஷார் ரிப்போர்ட்..
எக்காரணம் கொண்டும் உங்கள் குடும்பத்தினர், குறிப்பாக பெண்கள் புகைப்படத்தை பொதுவில் பகிராதீர்கள். அதிலும் பெண்கள் தங்களுடைய விதவிதமான ஸெல்ஃபி புகைப்படங்களையும், வீடு, அலுவலக புகைப்படங்களையும் பகிரும் போது மிக மிக கவனமாக இருப்பது அவசியம்.
உங்கள் புகைப்படங்களை திருடி அதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள தீயவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார்
ஆறு மாதத்திற்கு முன்பு நமது செய்திகள்.காம் வாசக நண்பரொருவர் தனது
குடும்பப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதில் அவரது
தங்கையின் புகைப்படத்தை மட்டும் தனியே எடுத்து ஃபேஸ்புக்கில் பெண்கள்
புகைப்படங்களை மட்டும் அசிங்கமாக ஷேர் செய்யும் ஒரு சில பக்கங்களில்
பகிர்ந்து அதற்கு அசிங்க அசிங்கமான கமெண்ட்டுகள் வேறு நிறைய வந்திருந்தன.பிறகு ஃபேஸ்புக்கில் புகார் செய்து அதனை நீக்க வைத்தோம்.
ஃபேஸ்புக்கில் ‘பெண்கள்’ என்று டைப் செய்தோ, அல்லது தமிழில் உங்களுக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளை டைப் செய்தோ பார்த்தால் வரும் ஃபேஸ்புக் பக்கங்களில் இப்படி பொதுவில் பகிரப்படும் பெண்கள் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து கேவலமான கமெண்ட்டுகளையும் அள்ளி வீசியிருப்பார்கள் என்பதைப் பார்க்கலாம்.
பெரும்பாலான சமயங்களில் இப்படி வெளியாகியிருக்கும் புகைப்படங்களை ஃபேஸ்புக் நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்று நீக்குவது பெரும் பாடாகவே இருக்கிறது.
**
சிங்கப்பூரில் கல்வி பயின்று தற்போது நார்வேயில் வசிக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலி ஃபேஸ்புக் ப்ரொஃபைல் தயார் செய்து சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய ஆண்களிடம் தொடர்பு கொண்டு ஏராளமாக ஏமாற்றி இருக்கிறார்கள். இதற்காக நார்வேயில் ஒரு சிம் கார்டு வாங்கி அதில் வாட்ஸப்பை உபயோகப்படுத்தி, உண்மையிலேயே நார்வேயில் வசிப்பது போல ஏமாற்றியிருக்கிறார்கள்.
கொஞ்ச நாள் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸப்பிலும் பழகி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஏதாவது காரணம் காட்டி பணம் கறந்திருக்கிறார்கள். ஆரம்பம் முதலே எதிர் தரப்பிடம் தான் தனியே வசிப்பதாகவும், அந்த நபரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தான் வலை வீசப்பட்டிருக்கிறது.
இந்தத் திருட்டுத் தனத்தை திட்டமிட்டு ஒரு தொழிலாகவே நடத்தியிருக்கிறார்கள்.
ஷீலா வேலாயுதம் என்ற பெண் உண்மையில் ஒரு அப்பாவி. அவர் தற்போது நார்வேயில் வசிக்கிறாராம். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் அவ்வப்போது பகிர்ந்த புகைப்படங்களையெல்லாம் சேகரித்து போலி பக்கத்தை உருவாக்கி நிறையப் பேரை ஏமாற்றியிருக்கிறார்கள்.
இப்போது ஷீலா வேலாயுதமும், அந்த போலி பக்கத்தால் ஏமாற்றப்பட்டவர்களும் காவல்துறையை நாடியிருக்கிறார்கள். போலி ஷீலா வேலாயுதம் பக்கம் இப்போது மூடப்பட்டு விட்டது. ஆனால் இதே போல மேலும் சில பெண்கள் பெயர்களில் போலி பக்கங்கள் உருவாக்கப்பட்டு, நிறையப் பேரிடம் இப்படி பணம் பறிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
ஷீலா வேலாயுதம் என்ற பெயரில் போலி ப்ரொஃபைல் பக்கம் தயாரித்து ஏமாற்றயதில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அது குறித்து ஒரு தனிப்பக்கம் உருவாக்கி அதில் தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
https://www.facebook.com/pages/Sheela-Velayudham-Scam/1631422340412192
இப்படி ஒரு பக்கம் உருவான பிறகு தான் அந்த ஷீலா வேலாயுதமிற்கு தன் பெயரையும், புகைப்படங்களையும் உபயோகப்படுத்தி யாரோ ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதே தெரியவந்திருக்கிறது.
இதே போல பல போலி பக்கங்கள் நீங்கள் பகிர்ந்த உங்கள் குடும்பப் பெண்கள் புகைப்படங்களை உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

0 comments:
கருத்துரையிடுக