பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
வட்டார வளமைய ஆசிரியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை மாலையில் கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் வட்டார வளமைய அலுவலகம் முன்பு நடந்த ஆப்பாட்டத்திற்கு அனைத்து வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் வேல்முருகன் விளக்கவுரை வழங்கினார். இதில் உயர்நீதி மன்ற கிளை உத்தரவின் படி 885 வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இடமாற்றம் செய்யவும், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு பணியாற்றினால் மாற்றம் செய்ய வேண்டும் என்ற அரசு உத்தரவை ரத்து செய்தல் மற்றும் தற்போதைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு வட்டார வள மையங்களில் இருந்து
வட்டார வள மைய ஆசிரியைகள், ஆசிரியர்கள் என மொத்தம் 71 பேர் வரையில் கலந்து
கொண்டனர்.

0 comments:
கருத்துரையிடுக