மும்பை மராட்டியத்தில் பள்ளிக்கூட
குழந்தைகள் சுமந்து செல்லும் புத்தக பைகளின் சுமையை குறைக்க கோரி மும்பை
ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள்
வி.எம்.கன்னடே மற்றும் எம்.எஸ்.சோனாக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு
வந்தது.
அப்போது அரசு
தரப்பில் பிரமாணப்பத்திரம் வாயிலாக பதிலளிக்கப்பட்டது. அதில், ‘‘பள்ளிக்கூட
குழந்தைகள் சுமந்து செல்லும் புத்தக பைகளின் சுமையை குறைக்க பரிந்துரைகள்
அளிக்குமாறு ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், தொடக்க பள்ளிக்கூட
அளவில் பாடத்திட்டம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால், புத்தகங்கள்
மற்றும் நோட்டு புத்தகங்களின் சுமை தானாகவே குறையும்’’ என்று
குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கை மே 5–ந் தேதிக்கு
நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.புதன், 22 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக