புதுவையில் உள்ள மருத்துவம் மற்றும்
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சென்டாக் மாணவர்களிடமிருந்து 2015–16க்கான
கல்விக்கட்டணத்தை காலக்கெடுவிற்குள் முன்கூட்டியே பெறுவது சம்பந்தமாக
பல்வேறு புகார்கள் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாணவர் சங்கம்
சார்பில் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை அனைத்து மருத்துவம்
மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டிற்கான கல்விக்கட்டணத்தை
முன்கூட்டியே ‘சென்டாக்’ மாணவர்களிடம் வசூலிப்பது தொடர்பாக ஒரு
சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
இதன்படி தற்போது முதலாம் ஆண்டுமுதல் 4–ம் ஆண்டுவரை படிக்கும் ‘சென்டாக்’
மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து ஆண்டின் இறுதித்தேர்வு
முடிவுகள் வெளிவந்து மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களிடம் அளிக்கும்வரை
வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையிலும் சில உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணத்தை
வசூலிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுசம்பந்தமாக
மாணவர்–பெற்றோர் நலச்சங்க தலைவர் ராஜ்பவன் பாலா உயர்கல்வித்துறை
இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக