வீட்டை பூட்டி சாவியை கொள்ளையனிடம் கொடுப்பதை போல கல்விக்கொள்ளைக்கு துணைபோகும் பெற்றோர்களின் செயல்கள்..
எத்துனை லட்சம் வேணும் என்றாலும் டொனேஷன் என்ற பெயரில் கையூட்டு கொடுத்து பள்ளியில் எல் கே.ஜி..யில் சேர்க்கின்ற பெற்றோர்களே ...
எதை இழக்கின்றீர்கள்... நீங்கள் ...பிள்ளைகளின் அருகாமையை இழக்கிறீர்கள்....

உங்கள் அப்பா உங்களை கவர்ன்மெண்ட்
ஸ்கூலில் படிக்கவைத்து நீங்கள் இன்று ஐ.டி.துறையில் வேலை பார்க்கவில்லையா?நான் ஐ.டியில் வேலை செய்கிறேன்,என் மனைவியும் அதே துறை என்று பெருமை பட்டுகொள்ளும்பெற்றோர்களே.
நாளை உங்கள் பிள்ளையால் உங்களுக்கு பெருமை வரணும் என்றால் ...
நல்ல பள்ளி அது அரசு பள்ளியாக இருப்பினும் அங்கு சேருங்கள்..அல்லது சாதாரண தனியார் பள்ளியில் சேருங்கள் .......
லட்சங்கள் வாங்கும் பள்ளிகள் லட்சியங்களை வளர்ப்பதில்லை என்பதை உணராத பெற்றோர்களை என்னவென்று சொல்வது.
பிள்ளைக்கு அரசு வேலை என்றால் மகிழ்ச்சி காட்டும் பெற்றோர் தான் அரசு பள்ளி என்றால் அவசரமாக மறுக்கின்றனர்...
இன்றைய பிள்ளைகளின் நிலை:
அம்மாவின் கைப்பட்ட அமுதில்லை ..
காலையில் ஃபிரேக் பாஸ்ட்,மதிய உணவு என அனைத்தையும் சேர்த்து காசு பார்க்கும் அவர்கள் அளிக்கும் உணவில் அன்பில்லையே பெற்றோர்களே..
பணம் சம்பாரிக்கின்ற ஆசை நமக்கு
பணம் சேர்க்கின்ற ஆசை அவர்களுக்கு....
இதில் அவர்கள் எதில் கவனம் செலுத்துவார்கள்.
அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அனைவரும் அரசு பள்ளியில் தான் படிக்கவேண்டும் என சட்டமாக்க வேண்டும் அரசு பள்ளியில் தரம் தானாக உயரும்
படிப்பை வியாபாரமாக்கி சம்பாதிக்கும் வியாபாரிகளும் (பள்ளி நிர்வாகம்), தன் பிள்ளைகளுக்காக ஊழலுக்கும் லஞ்சங்களுக்கும் பகடைக்காய்களாக மாறிவரும் இன்றைய பெற்றோர்களுக்கும் பெரியதொரு வித்தியாசம் இருந்துவிடப்போவதில்லை....
பள்ளி படிப்புடன் ,நல்லொழுக்கத்தை சொல்லித்தாருங்கள்.எங்கு படித்தாலும் சிறந்த பிள்ளை உங்கள் பிள்ளைதான் .
பணத்தால் வகுப்பறையில் ஓர் இடத்தை வாங்கலாம் ஆனால் கல்வியையும் குணத்தையும் வாங்க முடியாது
உணர்ந்துகொள்ளுங்கள் பெற்றோர்களே..
இந்த பிரச்சினைக்கான தீர்வு :
பெற்றோர்களே.. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு விலையுயர்ந்த கல்வி வாங்கி கொடுக்க....
நீங்கள் கொடுத்த விலையை ... அதற்குண்டான கஷ்டங்களை புரியவையுங்கள்.. நீங்கள் பட்ட கஷ்டத்தை உணர்ந்தாவது அவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வழியுண்டு..
தயவுசெய்து பெற்றோர்களே மாறுங்கள் ..
டொனேஷன் எனும் பெயரில் லஞ்சம் தராதீர்கள்...
பணம் கொடுத்து வாங்கும் படிப்பு கற்றுக்கொடுப்பது பணத்திற்காக எதையும் செய்யும் நடிப்பை மட்டுமே
என்பதை பெற்றோர்களே நீங்களும் நினைவில் கொள்ளுங்கள்..

0 comments:
கருத்துரையிடுக