சொந்த மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களில் பணிபுரியும்
இடைநிலை,பட்டதாரி,முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களே சுயமரியாதையுடன்
பணிபுரியமுடிகின்றதா?அலுவலகத்திலும்,பணிபுரியும் இடங்களிலும் சுதந்திரமான
மனநிலையில் உங்களால் இருக்கமுடிகின்றதா?பல மாவட்டங்களிலிருந்தும் சொந்த
ஒன்றிய ஆசிரியர்களால் மறைமுகமாக துன்புறுத்தபடுவதாகவும் சொந்த ஒன்றிய
ஆசிரியர்களால் மறைமுகமாக கேளிப்பேச்சு,ஏளனத்திற்கு உள்ளாவதாகவும் செய்திகள்
வருகின்றன.கடன் கேட்டு இரண்டு வெளி மாவட்ட ஆசிரியர்கள் அவர்களுக்குள்
ஜாமீன் கையொப்பமிட்டு அளிக்கப்படும்
விண்ணப்பங்கள் ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களால்
ஏற்றுக்கொள்ளப்படாமல் காத்திருப்பில் வைக்கப்படுவதாகவும் தகவல்கள்
வருகின்றன.வெளிமாவட்டம் என்பது தமிழ்நாட்டின் உள்ளே தானே உள்ளது.அது என்ன
தனிநாடா?தமிழ்நாடு அரசு தானே வெளிமாவட்டத்தில் பணிபுரிய நியமன ஆணை
கொடுக்கின்றது.பிறகு ஏன் மாற்றந்தாய் மனப்போக்குடன் வெளிமாவட்ட ஆசிரியர்கள்
நடத்தப்படுகிறார்கள்.சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிக்கொடுக்கும்
நம் ஆசிரியர் இனம் சாதி வெறி கொண்டு பிரிவினை வளர்த்துக் கொண்டு
உள்ளனர்.பணிஆணை பெற்று வெளி மாவட்டங்களிலிருந்து பணி ஏற்க வரும்
ஆசிரியர்களை தங்கள் சாதியின் பெயரால் அரவணைத்துக் கொள்ளும் சொந்த ஒன்றிய
ஆசிரியர்களின் போக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கண்கூடாக பார்க்க
முடிகின்றது.தங்கள் சாதி ஆசிரியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால்
முன்னின்று குரல் கொடுப்பதும் வேறு சாதி ஆசிரியர் என்றால் கண்டுகொள்ளாமல்
விட்டு விடுவதும் வெட்ககேடாக உள்ளது.வெளிமாவட்ட ஆசிரியர்களும் நமக்கு ஏன்
வம்பு என்று நினைத்து சொந்த ஒன்றிய ஆசிரியர்களின் மனம் நோகாமல் நடந்து
கொள்ளும் வகையில் தங்களை தயார் படுத்தி கொள்கின்றனர் .சுருக்கமாக சொன்னால்
வெளிமாவட்ட ஆசிரியர்கள்,சூடு,சொரணை,வெட்கம்,மானம்,ரோசம்,சுயமரியாதை,இன்னும்
பிறவற்றை தங்கள் சொந்த மாவட்டங்களில் விட்டு விட்டு வந்தால் நல்ல ஆசிரியர்
என்ற நிலையை பணி புரியும் ஒன்றியங்களில் விரைவில் அடையலாம்.
வெள்ளி, 17 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக