திட்டமிட்டு பழிவாங்கப்படும் ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமார்
திட்டமிட்டு பழிவாங்கப்படும் ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமார்-கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஆறுமாத உறுப்பினர் சந்தாவை ஒரே தவணையில் கட்டி பல ஆசிரியர்கள் கடன்பெற்று உள்ளனர்.அவ்வாறு ஆறுமாத சந்தாவை ஒரே தவணையில் செலுத்திய ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமாரை உறுப்பினர் இல்லை என்று கூறுகின்றனர்.சந்தா தொகை வேண்டும் ஆனால் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளமாட்டோம்?என்னய்யா நீதி இது?வெளி மாவட்ட ஆசிரியர் உரிமையாடு பேசக்கூடாதாம் உரத்தக்குரலில் பேசக்கூடாதாம் இதுதான் சங்க விதியோ?சக ஆசிரியர் தோழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டும் காணாமல் போகும் முகநூல் ஆசிரியனே உன் சகோதர பாசம் மெய்சிலிர்க்க வைக்கின்றது.ஆசிரியர் இயக்க தலைவர்களே இதையும் ஒரு செய்தியாக படித்துவிட்டு கடந்து செல்லுங்கள்.ஒரு தவறு தொடர்ச்சியாக இணையத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.உரிமைக்குரல் என்று முழக்கமிடுபவர்கள் எல்லாம் எங்கு போயினர்?ஆசிரியர் இனம் அடிமையாக இருப்பதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர் போலும்.

0 comments:
கருத்துரையிடுக